top of page
SRI THAVA NYANA AGASTIYAR.jpg
Guru Seedar.jpeg
Vallai Sitthar.jpg
SRI THAVA MURUGAN.jpg

மலேசிய ஶ்ரீ அகத்தியர் ஞான பீடத்தின்

சித்தர் ரிஷி  குருக்குலத்தின் சித்தர் நெறி வாழ்வு


  ஶ்ரீ அகத்தியர் ஞானபீட ஆன்மீக சங்கம் மலேசியாவில் அகத்தியர் ஞான பீடம் எனும் நாமத்தைப் பெற்றமைக்கு ஆத்ம ஞான அருட்செல்வர் அப்னா நாகப்பன்(பின்னாளில் குரு ஶ்ரீ வாலை மாமகரிஷி எனும் பெயர் சூட்டப்பட்டவர்)

 

 குரு அகத்திய மாமகரிஷியின் நல்லாசியுடன் ஞான பீடத்தை 30 மார்ச் 2005 இல் தோற்றுவித்தார்.

 

ஶ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் தோற்றமானது மானுட பிறவி எடுத்துள்ள மனிதனுக்குச் சேவை அடிப்படையின் மனிதன் மனிதனாக தன்னை உள்ளுணர்ந்து நற்பண்புகளைக் கடைப்பிடித்து

மதிக்கத்தக்க மனிதன் புனிதனாக உருமாற்றம் பெற்று மகான் என்ற உன்னத நிலையைத் தன்னகத்தே கொண்டு
 

இறுதியில் ஆத்மா பிறப்பின் பயனான பரமாத்மா எனும் பேற்றினை பரிபூரணம் அடையச் செய்தலை சாமன்யறும் அடைய நல்வழிமுறைவகுத்து தருகின்றது.


ஶ்ரீ அகத்தியர் ஞான பீடம் சித்தர்கள் போற்றிய கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் குறிப்பாக ஶ்ரீ அகத்தியர் மாமகிரிஷி முன்நிறுத்திய மெய்ஞான போதனைகளைப் பின்பற்றிய எண்ணற்ற ஆத்மாக்கள் பரமாத்மா எனும் பேற்றினை அடையச்செய்துள்ளது.ஆதலால் ஶ்ரீ அகத்தியர் ஞான பீடத்தின் குரு நாதர் ஶ்ரீ வாலை மாமகரிஷி குருகுலத்தை நிறுவி யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதனை மெய்பிக்க வேண்டி


 சித்தர் முனிவர் மற்றும் ரிஷிகளின் வழித்தோன்றளுக்குத் தன்கரம் நீட்டி பீடத்தின் தலையாய கோட்பாட்டினை உணர்த்த சித்தர் நெறி முறைகளைக் கற்றுத்தருகிறார் கண்முன் நிறுத்தி.



சித்தர் ரிஷி குருக்குலம்-குருவருள்நெறி
 

மலேசிய ஶ்ரீ அகத்தியர் ஞான பீடம் முருகப்பெருமான்,அகத்தியர்,வள்ளலார் குருசீடர் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி
 

குரு ஶ்ரீ வாலை மாமகரிஷி தன்னை அற்பணித்துக்கொண்டு பாங்கான வழிமுறைகளைப் போதிக்க முனைந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.


ஒவ்வொருவரும் தன்னுடைய முயற்சியின் வாயிலாகவும் எண்ணம்போல் ஆன்மீக வளர்ச்சியை முன்னெடுப்பாராயின்


 பலநிலைப்படிகளைக் கடந்து உறித்த அடைவு நிலையைக் கடக்க முடியும்.ஆக ஆன்மீக வளர்ச்சியில் படிநிலையானது,


ஒவ்வொருவரின் தகுதி அடிப்படையில் உறுதிப்படுத்தும் தவிர பணவசதி கருத்தில் எடுத்துக்கொள்ளமாட்டாது.


மேலும் ஆன்மீக மேம்பாட்டை முன் வைத்துள்ளவர்கள் குறிப்பிட்ட கால அளவில் அடைந்துவிட முடியும் என்று குறிப்பிட்டு கூற இயலாது.


மாறாக ஒருவரின் வளர்ச்சியானது அவர்தம் முயற்சியின் அடிப்படையில் நிகழும் என்பதை சான்று.


அட்டாங்கயோகம் அது பலித்திட அருளும் முத்தி என்றார் ( திருவள்ளுவர்)
 

1.. கருமயோகங்கள் எட்டு வகைப்படும். இந்த யோகங்களால் சித்தி கை வரப்பெறும்.


2. இயமம் என்பது – நல் எண்ணங்களை வளர்த்தல்.

    நியமம் என்பது – நற் காரியங்களை செய்தல்

 

3. ஆசனம் என்பது – உடலை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாக வைத்துக்கொள்ள உதவுவது யோகாசன பயிற்சியாகும். 

 

4. பிராணாயாமம் என்பது - உள் மூச்சு வெளி மூச்சு இரண்டையும் குரு கற்பித்த அளவில் ஒழுக்கப் படுத்தினால், அது மனதை கட்டுப்படுத்தி உடல் உறுப்புக்கள், நாடி நரம்புகளையும் பலப் படுத்தி தரும்.

 

5. பிரத்தியாகாரம் – என்பது ஐம் புலன் அடக்கம், அதாவது ஒளி, சப்தம், ஸ்பரிசம் இவைகளில் இருந்து தன் மனதை கட்டுப்படுத்தி உள்ளுணர்வுடன் இருக்கும் நிலை இது.

 

6. தாரணை – என்பது தன் மனதில் எழும் அனைத்து எண்ணங்களையும் வெளிப்படுத்தி அதில் சிக்காமல் ஒரே நிலையில் அமர்தல். இதற்கு உதவ குருமந்திரம் ஜெபிக்கலாம்


7. தியானம் - என்பது மனதை புருவ மையத்தில் நிலையாக கட்டி நிறுத்த வேண்டும். இதற்கு உதவ தனக்குப் பிடித்த குரு தந்த மந்திரத்தை  ஜெபிக்கலாம்.


8. சமாதி - என்பது தன்னை மறந்து, வெளி உலகத்தை மறந்து, தன் உள்ளத்தை சரி செய்து தன்னை பற்றிய அறிவே இல்லாமல் நெடுநேரம் தனக்குள் ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்பது சமாதி எனப்படும். சும்மா இருந்து சுகம் காண்


9. மனிதன் தன் வாழ்க்கையில் தினந்தோறும் செய்து வரும் காரியங்களில் _ ஜெபமும், தியானமும் சேர்க்கப்படவேணும்.


10. உடல் வளர்ச்சிக்காக உண்கிறோம், வளரும் உடலை நலமாக வைத்துக் கொள்ள தியானம் செய்யப்படுகின்றது.


11. புத்தியை கூர்மையாக்குவதற்கு அறிவு வேண்டும். புத்தியின் போக்கை கட்டி பிடிக்க தியான முறையினால் தான் முடியும்.


12. மனதில் எழுந்து வரும் உணர்ச்சிகளை ஒழுக்கப் படுத்துவதற்காகவும் தியானம் பயன் படுகிறது.


13. இறைவனின் அருளைப்பெற ஞானமும் தியானமும் சேர்ந்திருந்தால் நம்மை நாம் யார் என்பதை அறிவோம்.


14. தியானத்தில் ஒரு மேல் நிலையை அடைந்தப்பின் தன் ஆத்மனை உணர முடிகின்றது.


15. தியான மார்க்கத்துடன் ஞானமும் இனைந்து வந்தால் அத்துடன் நல்ல வாழ்க்கையை கடைப்பிடித்து வந்தால் அதுவே மோட்சத்திற்கு வழிக்காட்டியாகும்.


எனவேதான் மலேசிய ஶ்ரீ அகத்தியர் ஞான பீடமானது எந்த ஒரு கட்டணம் வசூலிக்காமல் சித்தர்களின் மெய்ஞான கோட்பாட்டினையும் நெறிமுறைகளையும் தகுதியானவர்களுக்கு மட்டும் இலவசமாகக் கற்றுத் தருகின்றது.

Disclaimer:

We have used our own photos for this website. However, we have taken some photos on the internet and would like to appreciate the owners. The credit of those photos goes to the owner of the photo or designer.

bottom of page